Actor Dileep Arrested in Actress Bhavana Case Reason Here?


Actor Dileep Arrested in Actress Bhavana Case Reason Here?


நடிகை Bhavana கடத்தல் வழக்கில் Arrestedசெய்யப்பட்டிருக்கிறார் மலையாள நடிகர் திலீப். ஹீரோ திலீப், வில்லன் ஆனது ஏன் என்ற தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, பாவனா கடத்தப்பட்டார். காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். அடுத்த சில நாட்களில் அந்த கார் டிரைவர் மார்ட்டின் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்இதுபற்றி போலீஸ் வட்டாரங்கள் கூறியது:திலீப், அவர் முதல் மனைவி மஞ்சு வாரியர், பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் செய்து வந்தனர். திலீப்- காவ்யா மாதவன் ஜோடியை, கேரள சினிமாவில் சூப்பர் ஜோடி என வர்ணித்தனர். படப்பிடிப்பில் இருவரும் அப்படி இப்படி இருப்பதை மஞ்சு வாரியரிடம் பாவனா போட்டுக்கொடுத்தாராம். இதனால் திலீப்புக்கும் மஞ்சுவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக பாவனா மீது திலீப்புக்கு கோபம்.
பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் செய்தபோது வாங்கிய சில நிலங்களை, பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு பாவனாவிடம் திலீப் கேட்டார். அதற்கு பாவனா மறுப்புத் தெரிவித்தாராம். இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அதை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் தொல்லை செய்து, அந்த வீடியோவை அவர் வருங்கால கணவர் நவீனுக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்.  இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

Vivegam movie New Poster